2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது: ஐவருக்கு காயம்

Editorial   / 2024 ஜூன் 10 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திகன- கெங்கல்ல வீதியில் காணி ஒன்றில் அழுகிய புளியமரம் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியிலுள்ள மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததைக் கண்ட வேன் சாரதி, விபத்தைத் தவிர்க்க முயன்றார். எனினும், வேனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மதில் மற்றும் தொலைபேசிக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (10) இடம்பெற்றுள்ளதுடன், வேனின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தில் பயணித்த இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றும் பல பாடசாலை மாணவர்கள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அழுகிய புளியமரத்தை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் காணியின் உரிமையாளருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்தும் பலனில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X