2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிப்பட்டறை

Janu   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்வாங்கல்,நல்லிணக்கம் மற்றும் சமூக நியாயத்திற்கான பன்முக செயற்பாடு தொடர்பில் விளக்க பயிற்சியளி்க்கும் கருத்து களம் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (21)  மற்றும் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.

இதில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த  சர்வ மத குழுக்களின்  குருமார்கள்,சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், அரசாங்க ஊழியர்கள்,பெண்கள் தலைமைத்துவ அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள், இளம் சமூகத்தினர் என பலரும் பங்குபற்றினர்.

இவர்களுக்கான கருத்திட்ட பயிற்சியினை உள்வாங்கல்,நல்லிணக்கம் மற்றும் சமூக நியாயத்திற்கான பன்முக செயற்பாட்டு கருத்திட்ட சர்வமத பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தணி,செயற்திட்ட சிரேஷ்ட அதிகாரி ஆயிஷா ஜெயவர்தன,மற்றும் நுவரெலியா மாவட்ட இணைப்பதிகாரி இரேஷா உதயானி ஆகியோர்  வழங்கினர்.

அத்துடன் மனித சமூகத்தில்  ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் உட்பட சமூகங்களுக்கு பேணப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு பயிற்சிகளும்,கருத்தாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X