2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பதுளை - கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

Janu   / 2024 மே 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவ - ஹப்புத்தளைக்கும் , தியத்தலாவ - பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் பாதையில்  வியாழக்கிழமை (23) காலை பாரிய  மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் - கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்திலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .