Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 05 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியொருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தோர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தோர் ஒருவரை அதே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தோர் ஒருவர் தனது ஸ்மார்ட் போனால் படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் உத்தியோகத்தோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்த லிந்துலை பொலிஸார் அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இதன்போது இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரை செவ்வாய்கிழமை (09) வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
50 minute ago
1 hours ago