Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 மார்ச் 09 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளிநாட்டுக்கு பொதிகள் விநியோகம் செய்யும் புதிய ஈ.எம்.எஸ் முறைமையை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்து வருகிறது . அதன் அடிப்படையில் நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தில் சனிக்கிழமை (08) அன்று ஈ.எம்.எஸ் பரிமாற்ற செயற்பாட்டினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தில் தொழில் புரியும் ஊழியர்கள் இணைந்து கூட்டமாக நடந்து சென்று நுவரெலியா பிரதான நகர் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு தெளிவூட்டல் தகவல்கள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர்.
அத்துடன் சர்வதேச பொதிகள் அனுப்புகின்ற சேவையை வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது . குறித்த நிகழ்வில் நுவரெலியா பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் டி.எம், ஜீவிக்க திஸாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.
தற்போது இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் இந்த EMS முறையில் பொருட்களை பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு அறிமுகம் செய்த ஈ,எம்.எஸ் பொதிகள் விநியோகமானது வெளிநாட்டில் உள்ள உறவுகளுக்கு மிகக் குறைந்த விலையில் மிகவும் பாதுகாப்பாக மற்றும் விரைவாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பதுடன் மேலதிக உதவிகளுக்காக 1950 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த முறையை நுவரெலியாவில் சந்தைப்படுத்தும் குழுவிற்காக தனியான வாட்ஸ்அப் செயலியில் பயன்படுத்த கியூ ஆர் (Quick Response) குறியீடு ஒன்றினையும் வெளியீடு செய்துள்ளனர்.
செ.திவாகரன் டி.சந்ரு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .