Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜனவரி 29 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.
பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர், சொரனாதோட்டை, கெடிகஹதன்ன, கொஹோவிலவில் வசிக்கும் தினேஷ் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 28ஆம் திகதி மதியம் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மரத்தில் சடலம் ஒன்றின் பாகங்கள் தூக்கில் தொங்குவதை கண்டு கந்தேகெதர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி வேலைக்கு செல்வதாக கூறி துணிப்பையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அதன் பிறகு குடும்பத்தினரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் துணிகளை காய வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கம்பியின் ஒரு பகுதியே கழுத்தை நெரிப்பதற்க பயன்படுத்தியமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago