Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 04 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம் நாட்டின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே எனவே அந்த தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
"நாடு கீழே விழும் போதெல்லாம் தூக்கி விடும் தூணாக இருந்தது தேயிலையே !கொரானா காலத்தில் நாடே பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற போது கைக்கொடுத்ததும் தேயிலை உற்பத்தியே எனவே நாம் அம்மகத்தான வேலையை செய்பவர்களை தேயிலை விவசாய உற்பத்தியாளர்கள் என அழைக்க வேண்டும்.
உலகத்தில் தேயிலை உற்பத்தில் முதலிடம் சீனா வகித்தாலும் இலங்கையும் தேயிலை உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கை உள்ளது.என அதை உற்பத்தி செய்யும் எம் மலையக சமூக மக்களை கௌரவமாக தேயிலை விவசாய உற்பத்தியாளர்களென அழைக்க வேண்டும்.தோட்டத்தொழிலாளி,கூலித்தொழிலாளி என்ற பதம் நீக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் எதெற்கெடுத்தாலும் வீதிக்கு இறங்கி போராடி உரிமைகளையும், சலுகைகளையும் பெற வேண்டிய நிலை மாறி அனைத்தையும் வழங்கி ஒரு கௌரவமிக்க சமூகமாக இலங்கையில் வாழ வழிவகைகளை நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் " என குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
59 minute ago
1 hours ago