Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு, ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெரும்பாலானோர், பட்டதாரி பாடநெறி, ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவற்றை நிறைவு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கான இறுதிக்கட்டப் பரீட்சை இன்னும் நடத்தப்படாமையால், ஆசிரியர் உதவியாளர்ள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதமொன்றிலேயே, இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2015ஆம் ஆண்டளவில், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 3,193 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர்களுக்குப் பட்டதாரி, கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகள் பெறல் வேண்டுமென்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன என்றம் அவர் கூறினார்.
அந்நிபந்தனைகளை, குறிப்பிட்டக் காலத்துக்குள் நிறைவு செய்த பின்னரே, அவர்கள் ஆசிரியர் சேவைகளுக்கு உள்வாங்கப்படுவர் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமையால், பெரும்பாலானோர், பட்டதாரி பாடநெறிகளையும் ஆசிரியர் பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளனர் என்றும் எனினும் அவர்களுக்குரிய பரீட்சை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாத்திரம் அடிப்படைக் கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்ளும் இந்த ஆசிரியர் உதவியாளர்கள், தத்தமது வாழ்வாதாரங்களை நடத்திச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும் எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே, இந்தப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்பதையும் தான் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது கல்விக்கூடங்கள் இயங்க ஆரம்பித்துள்ளமையால், விரைவில் இந்தப் பரீட்சைகளை நடத்துமாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago