2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சுரங்கத்தில் மோதுண்டவர் மரணம்

Editorial   / 2024 ஜூன் 03 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் சுரங்கத்தில் மோதியதில்   உயிரிழந்துள்ளதாக நானுஓயா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணத்த ரயிலில் எல்ல புகையிரத நிலையத்திற்கு பயணித்த வெளிநாட்டவர் புகையிரத சுரங்கப்பாதையில் திங்கட்கிழமை (03) மோதுண்டு மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான 19வது புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவர் சடலமாக மீட்கப்பட்டார், உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .