2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: தப்பிய `அலுப்புநாத்தி ` சிக்கியது

Editorial   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்,   பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது  சட்டை பின்கள் இரண்டை (அலுப்புநாத்தி ) விழுங்கியுள்ளார். அதனையடுத்து அந்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு   பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலைய பொலிஸார் இருவரும் பாதுகாப்பில் இருந்தனர். எனினும், அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே அவர் தப்பியோடிவிட்டார்.

அந்த சந்தேகநபர் கொடக்கவெல பிரதேசத்தில் மறைந்திருந்த போது, பொலிஸாரினால் புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.  

​தன்னுடைய தவறான மனைவியின் மகளை, அந்த வீட்டில் வசித்த போது   பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் தொல்லை தாங்க முடியாமல்,   வீட்டை விட்டு ஓடிவந்து  நடந்த சம்பவம் குறித்து சிறுமி புகார் செய்தார்.

  இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு செப்டெம்பர் 06 ஆம் திகதி  ​   அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்

முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு சட்டை பின்களை விழுங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X