Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூலை 11 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகினார் என்ற குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்.
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு வெளிநாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவர்கள், உலப்பனை பகுதியைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டுக்கு தாய் சென்றபோது, தன்னுடைய 9 வயதான மகனையும், 4 வயதான மகளையும், சாமிமலை,ஓல்டன் தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் ஒப்படைத்து சென்று உள்ளார்.
பிள்ளைகளை பார்ப்பதற்காக தாயின் வீட்டுக்கு அடிக்கடி வரும் மகன் (தாய் மாமன்) அந்த சிறுமிக்கு மதுவை பருகியுள்ளார். இதனை சிறுமியின் 9 வயதான அண்ணா கண்டுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே அந்த நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை (11) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செ.தி.பெருமாள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
27 minute ago