2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சறுக்கிச் சென்ற கார்

Janu   / 2024 மே 22 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்த கார் ஒன்று சறுக்கி, வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட இருவர் காயமடைந்து, திக் ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (22)  மாலை 4 மணியளவில் ஹட்டன் - பகவந்தலாவ பிரதான வீதி , வனராஜா வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கனமழை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த  நோர்வூட் பொலிஸார்,   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X