Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஊழல் செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை சில அரசியல் வாதிகளிடம் கருப்பு பணம் இருப்பதாக கூறினார்கள். ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்கள் ஆனால் இன்று முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன ஊழல் செய்தார் ? ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நுவரெலியாவில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
இந்த பிரச்சார கூட்டத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் கட்சியின் ஆதரவாளர் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண அமைச்சில் உள்ள நிதியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வாங்கி கொடுத்ததினால் சாமர சம்பத் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை வைத்தே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரத்து 350ருபாய் பெற்றுக்கொடுத்தது. 2020ம் ஆண்டு 28 வயதில் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றும் ஆயிரம் ருபாயினை பெற்றுக் கொடுத்தேன் அதேபோல் 2023ம் ஆண்டு அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பொருப்பேற்று 130 ருபாவை பெற்றுக்கொடுத்துள்ளேன் .அதன் போது கூட ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மறுதபாண்டி ராமேஸ்வரன் மாத்திரம் பக்கத்தில் வைத்திருந்தேன்.
எம்மிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை காங்கிரஸ் என்ற பலம் மாத்திரமே இருந்தது. முடியுமாக இருந்தால் 1700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை தோழர் அவர்களை பெற்றுக்கொடுக்குமாறு சவால் விடுகிறேன். தேர்தலுக்கு முன்பு பல்வேறு விஷயங்களை பேசியவர்கள் இன்று மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் நிதி ஒதுக்கீடு என கூறி மலையக மக்களை ஏமாற்றுகிறார்கள் இது தான் உண்மை மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியை விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை அன்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்ததை பொருட்டு மலையக மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. அதற்கு இந்திய அரசாங்கத்தை குறை கூற முடியாது மலையக பிரதிநிதிகள் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் .
மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என நினைத்தால் இந்த அரசாங்கத்தின் பக்கம் 159 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கின்றனர் இவர்கள் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துள்ளது. எவ்வித மாற்றங்களும் இவர்கள் கொண்டுவரவில்லை“ என்றார்.
எஸ்.சதீஷ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago