2025 ஜனவரி 04, சனிக்கிழமை

சுது கங்கையில் மூழ்கி இருவர் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் சுது கங்கையில் சனிக்கிழமை (28) மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையின் வலையில் சிக்கிய பீப்பாய் ஒன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற இளைஞன் தனது சக ஊழியரைக் காப்பாற்ற குதித்ததாகவும் ஆனால் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 24 வயதான சானக மதுஷங்க மற்றும் 24 வயதான மெனுகா மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X