2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

Janu   / 2024 ஜனவரி 04 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் உள்ள கேசல்கமுவ ஒயாவில் இனந்தெரியாதவர்கலாள் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம் பெற்று வருவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

காசல்ரீ நீர்த் தேக்கம் மற்றும் கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உப மின் நிலையத்திற்கு கேசல்கமுவ ஒயாவில் இருந்து இந்த நீர் கொண்டு செல்லப்படுகிறது.

இருந்த போதிலும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்ட பகுதியில் உள்ளவர்களே இந்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மக்கள் சுற்றி காட்டுகின்றனர்.

இந்த சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வினால் குறித்த கேசல்கமுவ ஒயாவின் நீரினை அன்றாட தேவைகளுக்குப் பயன் படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவிப்பதோடு குறித்த பகுதியில் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொள்ளவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.சதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .