2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டக் கல்லூரி மாணவியிடம் பண மோசடி

Janu   / 2024 நவம்பர் 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடெல்ல அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த  சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி , தனியார் தொலைபேசி நிறுவனமொன்றில் இருந்து பேசுவதாகவும் ஐந்து லட்சம் ரூபாய்  கொடுப்பனவு வழங்குவதாக கூறி,ஐந்து இலட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து முப்பது ரூபாய் பணத்தை  மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

தனியார் தொலைபேசி நிறுவனமொன்றில் இருந்து என அடையாளப்படுத்தி ஐந்து லட்சம் ரூபாய் சலுகை கிடைத்துள்ளதாக கூறிய நபர்கள் அதை வழங்குவதற்காக சமீபத்தில் பயன்படுத்திய கணக்கு எண்ணையும் OTP எண்ணையும் தர வேண்டும் என கூறியதையடுத்து குறித்த பெண் தனது சகோதரனை தொடர்புக்கொண்டு தனது இரண்டு தனியார் வங்கி கணக்கு என்களையும் OTP எண்களையும்  பெற்றுக்கொண்டு அனைத்து தகவல்களையும் அவர்களிடம் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து அவரது இரண்டு கணக்குகளில் இருந்து பணம் வேறு கணக்குகளுக்கு சென்றுள்ளதாக வங்கியில் இருந்து  இரண்டு குறுஞ்செய்திகள் வந்துள்ளது.   அதனையடுத்து அவரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணுக்கு அழைத்த போதும் அந்த எண் துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது.

பின்னர்,  இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பிபில பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .