Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரிடமிருந்து 04 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்லேகல தும்பர சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்லேகல தும்பரை சிறைச்சாலையில் கடமையாற்றும் நான்கு சிறைக்காவலர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹனுவர பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இந்த போதைப்பொருளை குறித்த சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து பெற்றுள்ளாரா? என பல்லேகல பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஷேன் செனவிரத்ன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago