2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

குளிக்கச் சென்ற சிறுவயது காதலன் விபத்தில் பலி

Janu   / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லபுகம, தும்மோதற பிரதேசத்தில் , காதல் ஜோடியொன்று பயணித்த மோட்டார் சைக்கிளில் கால்வாய்க்குள் விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, பமுனுவ பன்சலை வீதியை சேர்ந்த , பசிந்து லக்ஷான் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பெண் அம்பலாங்கொட கெனேன் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது

குறித்த இருவரும் குளிப்பதற்கு சென்று களு அக்கல பகுதியிலிருந்து லபுகம நோக்கி அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பெல்போல பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பற்ற கால்வாய்க்குள் விழுந்துள்ளதுடன் அப் பகுதி மக்களால் அவர்கள் மீட்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .