2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குளவி கொட்டினால் பெண் மரணம்

Editorial   / 2024 ஜனவரி 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா- படல்கல தோட்டத்தில் கடந்த 4ஆம் திகதி குளவி கொட்டுக்கு இலக்காகி  கிளங்கன்-டிக்கோயா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வௌ்ளிக்கிழமை (05)  உயிரிழந்துள்ளார்.

 குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்களும் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயதான சதாசிவம் சிந்தை என்ற பெண், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வௌ்ளிக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய 06 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .