Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதில் மூன்று தையல்கள் போடுமளவுக்கு அறைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கண்டி மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்கள ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின்போது, நகர சபை ஊழியருக்குக் காது பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்த காயங்கள் காரணமாக அவரது காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இந்திக்க தென்னகோன், குப்பைகளை வகைப்படுத்தாமல், குப்பைப் பையை வாகனம் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்கள், குப்பையை முறையாகக் கொண்டு வருமாறு கூறி, குப்பை பொறுப்பெடுக்காது, காரிலேயே ஏற்றிவிட்டுள்ளனர். அத்துடன், வாகனத்தை இலக்கத்தைப் படம் எடுக்க முயன்றுள்ளனர். இதன்போது, திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்கள ஊழியரை முன்னாள் உறுப்பினரான இந்திக்க தென்னகோன் காதில் அறைந்துள்ளார். இதனையடுத்து, காதில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளதுடன், முன்னாள் உறுப்பினர் இந்திக்க தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் கண்டி- சுதாஹம்பொல ஊழியர்கள் வேலையில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) விலகியுள்ளனர்.குப்பைகளை முறையாக பிரிக்காமல் முறையாக அகற்றுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .