2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

காதலியின் கத்தி குத்துக்கு காதலன் பலி

Janu   / 2025 ஜனவரி 28 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான  வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால்  குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுஜித் பிரதீப் குமார (31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் திருமணமானவர், ஒரு குழந்தையின் தந்தை என்றும், அவரது மனைவி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவர், சந்தேக நபரான அந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த பெண், வெல்லவாய, கொட்டவெஹெர பகுதியில் வாடகைக்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார்  நடத்திய விசாரணையில், இறந்தவர் தனது காதலியின் விடுதி அறைக்கு பலமுறை சென்றிருப்பதும், சம்பவம் நடந்த நாளில், விடுதி அறைக்குச் சென்றபோது, அவரது காதலி புதிய வேலைக்கான நேர்காணலுக்கு ஆஜராகப் போவதாகக் கூறியதும் தெரியவந்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X