2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Janu   / 2024 மார்ச் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்தில்  நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை  (03)  மாலையிலிருந்து  காணாமல் போயிருந்த நிலையில் திங்கட்கிழமை (04) காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் ( ராஜமணி) என்பவரே இவ்வாறு  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்  .

குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அதின்  பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின்  போதே   குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகில்  தன் உயிரை  மாய்த்துக்கொண்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளார் .

மேலும்  இச்  சம்பவம்  தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செ . தி . பெருமாள் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .