Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 18, புதன்கிழமை
Janu / 2024 நவம்பர் 05 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதுடன் இதன்போது லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (05) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் லொறியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் , மருத்துவப் பணிகள் நிறைவடைந்ததும் கர்ப்பிணிப் பெண் வந்து லொறியில் அமர்ந்திருந்துள்ளார். இதன்போது சாரதியின்றி குறித்த லொறி முன்னோக்கி சென்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
17 Dec 2024