Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் கரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்றைய தினம் (01) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதன்கிழமை (31) வரை 1100 ரூபாவுக்கு அதிகமாக மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நுவரெலியா கரட்டின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு இன்றைய தினம் (01) ரூ.850 க்கு மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய காரியாலயத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் நுவரெலியாவில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மரக்கறிகளின் விளைச்சல் தற்போது நிலவும் சீரான காநிலையில் சீராகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நீண்ட நாட்களுக்கு பின் புதன்கிழமை (31) மாலை 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கரட் வெளிமாவட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் ஏனைய மரக்கறிகள் அடங்களாக 55 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மரக்கறிகள் வெளி சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்
ஆ.ரமேஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago