Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 17 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன், புளியாவத்தை சாஞ்சிமலை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் பலியானார். சம்பவத்தில், காயமடைந்த மூவர் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப்பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த நிலையிலேயே இவ்விபத்து இடம் பெற்றள்ளது.
புளியாவத்தை மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 27வயதுடைய தனபாலன் நிஷாந்தன் என்பவரே பலியானார். இவர், பிலிங்போனி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துவாரக்ஷான்எஸ்.சதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .