2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓடிக்கொண்டிருந்த ஓட்டோ தீப்பிடித்து கருகியது

Editorial   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ,இன்று (23) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியில் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.

ஹட்டனில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததாகவும், மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் தெரிவித்தார்.

 பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .