Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2022 நவம்பர் 07 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்தியால் குத்திக்கொலை
புத்தளம் வில்லிவத்த பிரதேசத்தில், நபரொருவர் மீது கத்தியால் குத்தியமையால் கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 43 வயதானவரே மரணமடைந்துள்ளார். சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்.
தன்னுடைய தேவைக்காக, சுத்தமான குடிநீர் போத்தல் விற்பனைச் செய்யும் வர்த்தக நிலையத்துக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது நடந்து வந்த இருவர் வர்த்தகருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுக்க முயன்றபோதே, கத்தியால் குத்திவிட்டு அவ்விருவரும் தப்பியோடியுள்ளனர்.
ரயிலில் மோதி மரணம்
வெல்லவ- கனேவத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணமடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற சம்பவத்தில் மரணமடைந்த 40க்கும் 50க்கும் இடைப்பட்டவர், கபில நிற அரை காற்சட்டையும் வௌ்ளை நிறத்திலான் ரி-சேர்ட்டும் அணிந்திருந்தார். சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெல்லவ பொலிஸார். அடையாளம் காட்டுமாறு கோரியுள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்ந்தவர் கைது
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பட தோடடத்தில், அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 21 வயதானவர் நோர்வூட் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவைச் சேர்ந்த இவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று ஆஜராகுமாறும் பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
6 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆறு துப்பாக்கிகளுடன் கொபேயின்கனே பிரதேசத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட 54 வயதானவரிடம் இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட 290 பறவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொபேயின்கனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வநருகின்றனர்.
கோடாவுடன் ஒருவர் கைது
வத்தளை- மஹாபாகே பிரதேசத்தில் ஞாயிறுக்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஆறு பெரல்களில் இருந்து 1,049 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
வெலிசரயைச் சேர்ந்த 42 வயதானவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள மஹாபாகே பொலிஸார், வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று ஆஜராகுமாறும் கட்டளையிட்டுள்ளனர்.
சட்டவிரோதமான மதுபானம் சிக்கியது
நீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 33 லீற்றர் மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்ட 52 வயதானவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தள்ளதாக தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீதி விபத்தில் பாதசாரி பலி
எப்பாவல பொலிஸ் பிரிவில் கெக்கிராவ-அனுராதபும் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்கமுயன்ற 77 வயதான பெண்ணின் மீது மோதியதில் அப்பெண் உயிரிழந்துள்ளார். ஞாயிறுக்கிழமை (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்துள்ள எப்பாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் விபத்தில் தாய் பலி
அனுராதபுரம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு பயணித்துக்கொண்டிருந்த காரொன்று, வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நால்வர் காயமடைந்தனர்.
பெண்ணொருவரினால் ஓட்டிச்செல்லப்பட்ட காரிலிருந்த அவரது இரண்டு பிள்ளைகளும், தாயும் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 68 வயதான தாய் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவித்த அனுராதபுரம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
24 Nov 2024