2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஏணியில் ஏறி மிளகு பறித்தவர் மரணம்

Janu   / 2024 ஜூன் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளகம்மன பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மிளகு பறித்துக்கொண்டிருக்கும் போது  தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது .

பிபில பதுள்ளகம்மன பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய டி.எம்.விமலசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏணியில் ஏறி, மரமொன்றில் இருந்த மிளகு கொடியிலிருந்து  மிளகு பறித்துக்கொண்டிருந்த போது ஏணி கவிழ்ந்ததில் ,  கீழே விழுந்து  காயமடைந்து பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X