2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உரிமைகளை வழங்க கோரி போராட்டம்

Janu   / 2024 ஜூன் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களுக்கு, அரசாங்கம் சகல உரிமைகளை வழங்க கோரி மாத்தலையில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில்,   அரசாங்கம் ,கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று சனிக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது .

தில் கலந்துகொண்டவர்கள் கோசங்கள் எழுப்பி, பதாகைகள் ஏந்தியவாறு தங்களின் உரிமைகளை அரசாங்கத்திற்கு வலியுறுத்தினர். 

ஆர்ப்பாட்டம் பிரதான நகரில் ஊர்வலமாக வருகை தந்து அதனைத் தொடர்ந்து அங்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டமும்  இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டத்தில்,   காணி உரிமை,  வீட்டு உரிமை ,தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு, மொழி உரிமை, அரசியல் உரிமை, பெண்களுக்கான உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துவாரக்ஷான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X