Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 18 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவர்கள், கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை, கினிகத்ஹேன நகருக்கு பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இந்த மாணவர்கள், உணவு அருந்துவதற்காக உணவகமொன்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கியிருந்த அடித்தளத்தின் தளம் உடைந்து சுமார் 15 அடி சாய்வாக கீழே விழுந்துள்ளது.
குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago