Mithuna / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது எதிர்வரும் 19ம் திகதி பொகவந்தலாவ பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்பு திட்டத்திற்கு அடிகல் நாட்டும் நிகழ்விற்கு குறித்த பகுதியில் உள்ள காணியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே தொ. தே. ச. வின் நான்கு ஆதரவாளர்கள் இ. தொ. கா. வின் ஆதரவாளர்களை தாக்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் தமக்கு வேண்டப்பட்டவருக்கு வீடுகளை வழங்குவதாக கூறி இ.தொ.கா தலைவர் பணம் பெற்றதாக , கூறி தோட்ட பொது மக்களால் பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025