2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றுக்குள் பாய்ந்தது ஜீப்: இருவர் பலி; ஒருவர் மாயம்

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலியானதோடு, வாகன சாரதி காணாமல் போயுள்ளார்.

பெத்தேகம பிரதேசத்திலுள்ள பாலத்திற்கருகில் ஜீப் ரக வாகனமொன்று இன்று (19) பிற்பகல் பாதையை விட்டு விலகி 100 மீற்றர் பள்ளத்திலுள்ள ஆற்றில் பாய்ந்ததில் வாகனத்தில் பயணம் செய்த 76 வயதான ஓய்வுபெற்ற அதிபரான பிரேமரத்தின பலியானதோடு அவரது மனைவியான 75 வயது நிரம்பிய கருணாவதியும் பலியானார்.

வாகனத்தில் பயணம் செய்த ரஞ்சித் அபேரத்ன (வயது 55) மடுல்கலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். 

வாகன சாரதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செலலப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கும் பன்விலை பொலிஸ் நியைப் பொறுப்பதிகாரி லலிந்த பீரிஸ், அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் வாகனத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறே இவ்விபத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X