2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரிசியுடன் நடுவீதியில் புரண்டது அரிசிலொறி

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

திருப்பிவிடப்பட்ட அரிசி லொறியொன்று, வீதியிலேயே புரண்ட சம்பவமொன்று ​ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

பொலனறுவையில் இருந்து நுவரெலியாவுக்கு அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற கெண்டனர் ரக லொறியே இவ்வாறு புரண்டுள்ளது.

கம்பளை நகரில், செவ்வாய்க்கிழமை (26) இரவு பெரஹரா இடம்பெற்றது. இதனால், பிரதான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார், அந்த லொறி உள்ளிட்ட வாகனங்களை கம்பளை-அம்புலுவாவ பிரதான வீதிக்கு திருப்பிவிட்டனர்.

 

அவ்வாறு திருப்பிவிடப்பட்ட லொறி, ஹெம்மாத்தகவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, அம்புலுவாவ மூன்றாவது கட்டை பகுதியில் வைத்து, நடுவீதியில் வைத்தே புரண்டுள்ளது. வாகனத்தில் பிரேக் இன்மையால் லொறியை மண்மேட்டில் சாரதி மோதியுள்ளார். இதனால், அந்த லொறி, நடுவீதியிலேயே புரண்டுள்ளது. இல்லையேல் அருகில் இருக்கும் பள்ளத்தில் பாய்ந்திருக்கும் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் எனத் தெரிவித்த ஹெம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .