Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் உள்ள அக்குரணை நகரம் நீரில் மூழ்கியது.
அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குரணை நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதுடன் ஹத்தே கன்வான, குடுகல மற்றும் ஏனைய பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அந்த வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.
அக்குரணை நகரின் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா என்பன நிரம்பி வழிவதால் வருடத்திற்கு பல தடவைகள் அக்குறணை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழமையான நிலைமையாக மாறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
56 minute ago
1 hours ago