Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 31 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஹரன்ராஜ் (இயன் மருத்துவப் பிரிவு, பேராதனைப் பல்கலை)
இன்று, நாளுக்கு நாள் அதிகமாகப் பேசப்படுகின்ற வார்த்தைகளில் ஒன்று ஆதரைட்டிஸ்;. மருத்துவத்துறை எவ்வாறு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறதோ அதேபோல ஆதரைட்டிஸ் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கிட்டத்தட்ட 200 வகையான ஆதரைட்டிஸ் உள்ளன. அதில் பிரதான ழுளவநழ யுசவாசவைள பற்றியே நாம் இன்று ஆராய இருக்கின்றோம். ஆதரைட்டிஸ் என்றால் என்ன? ஆதரைட்டிஸ் ஏற்படக் காரணங்கள் எவை? ஆதரைட்டிஸால் ஏற்படும் பாதிப்புக்கள் எவை? ஆதரைட்டிஸை எவ்வாறு இனங்காண்பது? ஆதரைட்டிஸ் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவைப்; பற்றியே இன்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.
ஆதரைட்டிஸ் என்றால் என்ன?
மூட்டுக்களில் ஏற்படுகின்ற அழற்சி (Joint Inflammation). அதாவது மூட்டுக்களில் உராய்வு நீக்கியாக என்புகளைச் சூழ்ந்து காணப்படுகின்ற பாயபொருள் மற்றும் தொடுப்பிழையங்கள் சிதைவடைந்து ஏற்படுகின்ற வலி, மூட்டுவீக்கம், மூட்டு இறுக்கமடைதலுடன் கூடிய மூட்டு அழற்சி ஆதரைட்டிஸ் ஆகும்.
பொதுவாக மூட்டுக்களில் Gelly தன்மையான உராய்வு நீக்கிப் பதார்த்தங்களும் என்பின் தொடுகையுறுகின்ற மேற்பரப்பைச் சூழ்ந்து கசியிழையமும் காணப்படும். இவை என்புகள் ஒன்றோடொன்று தொடுகையுற்று மூட்டுக்கள் தேய்வடைவதைத் தடுக்கின்றன. ஆனால், பல்வேறு வகையான காரணிகள் ஆதரைட்டிஸ் ஏற்படுவதில் பங்களிப்புச் செய்கின்றன.
ஆதரைட்டிஸ்ஸை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்
ஒருவர் உயரத்துக்;கேற்ற சாதாரணமான நிறையைக் கொண்டிராமல், மேலதிக நிறையைக் கொண்டிருத்தல். இதன்போது உடல்பாரத்தின் பெரும்பகுதி முழங்கால் மூட்டின் ஊடாக கடத்தப்படும். இவ்வாறான அதிகூடிய அழுத்தங்கள் முழங்காலில் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்படும்போது, அது ஆதரைட்டிஸ் நோய் நிலைமையின் விருத்திக்குப் பங்களிப்பு செய்கிறது.
மூட்டுக்களில் ஏற்படும் அடி, சேதங்கள் மூட்டுக்களின் சாதாரண தொழிற்பாடுகளைப் பாதிப்பதால் இவை ஆதரைட்டிஸ் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. இவை மூட்டுக்களில் அழற்சியை (Joint Inflammation) ஏற்படுத்துவதன் காரணமாக மூட்டு வீக்கமடைதல்(Swelling), கடுமையான வலி (Severe Pain) உணரப்படுதல் போன்றவை மூட்டுவாதம் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
பல்வேறு வகையான நுண்ணங்கித் தொற்றுக்களின் காரணமாக மூட்டுக்களின் தொழிற்பாடு பாதிக்கப்படுகிறது. இதன்போது மூட்டுக்கள் சிவந்து, வீக்கமடைந்து, கடும் வலியுடன் காணப்படும். நுண்ணங்கித் தொற்றுக்கள் வழமைக்கு மாறாக அதிகரிக்கின்றமையும் ஒரு காரணமாக அமைகின்றது. அத்தோடு நுண்ணங்கித் தொற்றுக்களால் உராய்வு நீக்கிப் பதார்த்தம் சிதைவடைந்து ஆதரைட்டிஸ் உருவாகக் காரணமாக அமைகிறது.
பல்வேறு வகையான தொழில்களில் முழங்கால் மூட்டு திரும்பத் திரும்ப அதிகளவில் மடிதலுக்கும் நீட்டுதலுக்கும் உள்ளாவதும் இந்நிலை ஏற்படக் காரணமாகி விடுகிறது. ஆசிரியர்கள், Traffic Police, சிகை அலங்கார நிபுணர் போன்று அதிகளவு நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கும் ஆதரைட்டிஸ் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
வயதாகும்போது மூட்டுக்களைச் சூழவுள்ள தசை நார்களின் உறுதி குறைவதன் காரணமாக, உராய்வு நீக்கி பாய பொருளின் அளவு குறைவதனால் ஆதரைட்டிஸ் ஏற்படுகின்றது.
ஆதரைட்டிஸ்ஸால் பொதுவாகப் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 60% பெண்கள் ஆதரைட்டிஸ்ஸால் பாதிக்கப்படுகிறார்கள்.
பரம்பரை இயல்பும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. பரம்பரை இயல்பு ஒரு சந்ததியிலிருந்து மற்றைய சந்ததிக்குக் கடத்தப்படுவதால் இது ஏற்படுகின்றது.
ஆதரைட்டிஸின் அறிகுறிகள் படிப்படியாகவோ அல்லது சடுதியாகவோ தென்படலாம். ஆதரைட்டிஸ் என்பது நீண்டகால நோய் நிலைமையாகும். இதன்போது அறிகுறிகள் அடிக்கடி தோன்றலாம் அல்லது எப்போதாவது தோன்றலாம்.
ஆதரைட்டிஸின் அறிகுறிகள்
மூட்டுக்களைச் சூழ, தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி ஏற்படும் வலியானது குறித்த ஒரு மூட்டிலோ அல்லது பல மூட்டுகளிலோ அவதானிக்கப்படலாம்.
ஆதரைட்டிஸ்ஸால் பாதிக்கப்பட்ட மூட்டானது சாதாரண மூட்டின் பருமனை விட வீக்கமடைந்து காணப்படும். அத்தோடு பாதிப்படைந்த மூட்டின் மேற்பரப்பு, பள பளப்புத் தன்மையுடையதாகத் தோற்றமளிக்கும்.
ஆதரைட்டிஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலையில் எழும்போது மூட்டு, விறைப்புத் தன்மையுடையதாக இருக்கும். பின்னர் நேரம் செல்லச் செல்ல மூட்டினுடைய விறைப்புத் தன்மை படிப்படியாகக் குறையும். அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்துவிட்டு எழும்போது மூட்டானது விறைத்ததுபோல அல்லது திமிர்த்ததுபோல இருக்கும். நேரம் செல்லச் செல்ல மூட்டு இலேசானதாக மாறும். பொதுவாக மூட்டினுடைய விறைப்புத் தன்மை குறைவடைய சுமார் 30-60 நிமிடங்கள் வரை எடுக்கும்.
ஆத்தரைட்டிஸ் வராமல் தடுப்பதற்கான வழிகள்
சிறந்த உணவுப் பழக்கவழக்கமும் முறையான உடற்பயிற்சியும் ஆதரைட்டிஸ் வராமல் தடுப்பதற்கு இன்றியமையாதவை.
ஆதரைட்டிஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியைக் குறைத்து சிறந்த வலி நிவாரணம் பெறவும் பாதிப்படைந்த மூட்டின் அசைவை அதிகரித்து, சேதமடைந்த மூட்டு இழையங்களைத் திருத்தி அமைக்கவும் கூடிய பல்வேறு சிகிச்சை முறைகள் இயன் மருத்துவத்திலேயே உள்ளன.
அத்தோடு ஒரு நோயாளியின் நோய் நிலைமைக்கேற்ப அவரது உடல்நலத்தை முழுமையாக அலசி ஆராய்ந்து அவருக்கு மிகப் பொருத்தமான உடற்பயிற்சிகளை சரியான காலநேர இடைவெளிகளில் திட்டமிட்டு வழங்க ஓர் இயன் மருத்துவராலேயே முடியும்.
பிழையான, அளவுக்கதிகமான உடற்பயிற்சிகளானது ஆதரைட்டிஸ் பாதிக்கப்புக்குள்ளானவர்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, திறமையான இயன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முறையான உடற்பயிற்சிகளை, அவருடைய வழிகாட்டலுக்கேற்ப பின்பற்றுவது சிறந்தது.
மேலும், உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பொருத்தமான ரேவசவைழைnளைவ அல்லது னுநைவவைழைn இடமிருந்து பெற்று ஆதரைட்டிஸ்ஸை விரட்டியடியுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago