Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகைத்தலைத் தடுப்பதற்கான திட்டமிடல்கள்?
ஆரம்பத் திட்ட அணுகுமுறை
நீங்கள், புகைத்தலை நிறுத்தவேண்டும் என நினைக்கின்றபோதே, நிறுத்தல் செயற்பாட்டில், பாதி வழி பயணித்துவிட்டீர்கள். திட்டமிடல்களை START என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துக்களைக் கொண்டு பின்வருமாறு செயற்படுத்துங்கள்.
புகைத்தலைத் தவிர்ப்பதற்கான திகதியை தீர்மானித்து அதனை உங்கள் வாழ்க்கையின் உலக சாதனை நாளாக பதிவு செய்யுங்கள். மேலும் இத்தினமானது, உங்களுடைய அல்லது நீங்கள் மிகவும் நேசிக்கின்ற நபரின் பிறந்த தினமாக அல்லது சர்வதேச புகைத்தல் தவிர்ப்பு தினமாகவிருத்தல் சிறப்பாகவிருக்கும்;.
உங்களுடைய குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் புகைத்தல் நிறுத்தம் பற்றி கூறுவதோடு அவர்களுடைய ஊக்கப்படுத்தல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இரகசிய புகைப் பிடிப்பாளர்கள், உங்களுடைய சிறந்த நண்பர்கள் அல்லது இஷ்ட தெய்வத்திடம் கூறிக் கொள்ளுங்கள்.
புகைத்தல் சிறையிலிருந்து நீங்கள் விடுதலை பெறுகின்றபோது, புகைத்தல் தவிர்ப்பு அறிகுறிகளின் தவிப்பினால் மீண்டும் புகைப்பவராக மாறுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் திடசங்கற்பத்தை வலுவாக மனதிற் பூண்டுகொள்ளுங்கள்.
உடனடியாக, உங்களுடைய வீடு, வாகனம் மற்றும் வேலைத் தளங்களில் காணப்படும் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களையும் அவற்றின் வெற்றுப்பைகள், தீப்பெட்டி மற்றும் சாம்பற்தட்டு போன்றவற்றை நீக்கி நறுமணத் தெளிப்புக்களினால் நல் மணம் கமழச் செய்யுங்கள்.
புகைத்தற் தவிர்ப்பு அறிகுறிகளினாலும் வேறு ஏதேனும் காரணங்களாலும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றபோது, தாமதிக்காமல் மருத்துவரை நாடி பொருத்தமான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
புகைத்தல் நிறுத்தத்தின் பின்னர், திடீரென கணப் பொழுதில் ஏற்படும் சிகரெட் ஏக்கத்தைக் குணப்படுத்தல்?
தாய் சட்ட அணுகுமுறையின் ஊடான செயன்முறைகள்
1 மனதை ஒருமுகப்படுத்தி புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிப்பதிலும் ஏனைய வேலைகளைச் செய்வதிலும் முனைப்புக் காட்டுதல்
2 சூயிங்கம் மற்றும் மின்ற் டொபி போன்றவற்றைப் பிரதியீட்டுப் பொருட்களாக உள்ளெடுத்து மெல்லுதல்
3 அடிக்கடி பல் துலக்குதல்
4 ஏதாவது எழுத்து வேலைகள், அலைபேசி மற்றும் கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம், கையைத் தொடர்ந்து வேலையில் ஈடுபட வைத்தல்
5 விளையாட்டு, இசையை இரசித்தல் மற்றும் தொலைக்காட்சி பார்த்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடல்
6 மிருதுவான குளியல், தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றின் ஊடாக பதற்றமற்ற நிலையைப் பேணல்
7 பற்றவைக்க வேண்டுமென்ற உணர்வு எழுகின்ற போது, சிகரெட்டுக்குப் பதிலாக மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஒளியூட்டுதல்
8 உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல்
9 நன்றாக நீர் அருந்துவதன் மூலம் புகைத்தல் தவிர்ப்பு அறிகுறிகளை நீர்;த்துப்போகச் செய்தல்
புகைத்தல் தவிர்ப்பு அறிகுறிகளை சமாளித்தல்?
மருத்துவர் நடன அணுகு முறை
நார்ச்சத்துள்ள உணவுகளை உள்ளெடுத்தல், குறைந்த கலோரி சிற்றுண்டிகள் மற்றும் மென்பானம், இருமல் மருந்து மற்றும் தேவையான அளவு நீர்; பருகுதல் போன்றவற்றின் மூலம் முறையே மலச்சிக்கல், அதிக பசி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளை இலகுவாக இல்லாமற் செய்யலாம்.
வேலைப்பழு, மனவழுத்தத்தை குறைத்தல், கவனத்தை திசைதிருப்புதல், விறுவிறுப்பான நடை, இரவு நேரக் கோப்பி அருந்துவதைத் தவிர்த்தல், உடற்பயிற்சி செய்தல், குட்டித் தூக்கம் போடுதல், தங்களைத் தாங்கள் தொந்தரவு செய்தலைத் தவிர்த்தல், சுயதிருப்தி, போதுமான ஓய்வு போன்றவற்றின் முலம் முறையே தலைவலி, புகையிலைக்கான ஏக்கம், நித்திரைக் குழப்பம், சோர்வு மற்றும் எரிச்சலுணர்வு போன்றவற்றை இலகுவாக இல்லாமற் செய்யலாம்.
புகைத்தலை நிறுத்திய பின்னர் மீண்டும் புகைப்பிடிக்காமல் தவிர்ப்பது
மத்தியகுழாய் திட்ட அணுகுமுறை
தவிர்ப்பின் பின்னரான புதிய நல்ல பழக்கவழக்கங்களை தொடர்ச்சியாக கடைப்பிடித்தல், புகைத்தற் தவிர்ப்பின் மீதான ஆர்வம், மற்றும் நிலையான தீர்மானம், தவிர்த்தல் பற்றிய நேர்முக சிந்தனைகள், தவிர்;த்தலொன்றையே இலக்காக கொண்ட மனப்பாங்கு, தவிர்த்;;தலுக்கான முறையான தயார்படுத்தல்கள் போன்ற பல படிமுறைச் செயற்பாடுகளின் கூட்டு விளைவே புகைத்தற் தவிர்ப்பாகும். இவற்றின் ஏதாவதொரு படிநிலையின் வினைத்திறனற்ற தன்மை மீண்டும் புகை பிடிப்பதற்கு தூண்டலாம்.
உங்களை நீங்கள் அறிவூட்டுதல், மீண்டும் புகைப்பதற்கு தூண்டும் காரணிகளை அடையாளப்படுத்தி அகற்றுதல், புகைத்தலை தவிர்க்க விரும்பும் மற்றையவர்களோடும் சமூகத்தோடும் சேர்ந்தியங்குதல், தவிர்ப்புக்;கான பல் பரிமாண அணுகு முறைகளை பின்பற்றுதல் மற்றும் இதுவரைக்கும் தவிர்த்திருக்கின்ற நிலையையாவது தொடர்ந்தும் பேணுதல் போன்றவற்றின் மூலம், மீளவும் புகைப்பதை வெகுவாகக் குறைக்கலாம்.
மதுவினால் விளையும் ஆரோக்கியத் தீமைகள்
மூளையின் ஒருங்கிணைப்பு திறன் பாதிப்பு, பார்வைக் குறைபாடு, தெளிவற்ற பேச்சு, தலைச்சுற்று, வாந்தி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற குறுகிய கால சிக்கல்களையும், ஈரலழற்சி மற்றும் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள், ஈரல், சதையி, வாய் மற்றும் மார்பு புற்று நோய்கள், இரைப்பை மற்றும் குடற்புண், மூளைப் பாதிப்புக்கள் மற்றும் சிறுநீரக நோய் போன்ற நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்தும்.
மதுவருந்துதலின் வகைப்படுத்தல்கள்
மிதமான, களியாட்ட, தீங்கான மற்றும் அடிமை மதுபாவனை போன்ற பல்வேறு நிலைகளில் அமையும். இவற்றில், ஒவ்வொரு வகை மதுப் பழக்கத்தினாலும் விளையும் ஆரோக்கியச் சிக்கல்களும் இதர பிரச்சினைகளும் வௌ;வேறு அளவுகளில் இருக்கும்.
எவ்வாறெனினும் குறுகிய அளவில் ஆரம்பிக்கும் குடிப் பழக்கம், குடிக்கு அடிமையாகி, குடிமுழுகச் செய்கின்ற நிலையையே அனேகமான குடிமக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
இரத்தத்தில் காணப்படும் மதுவின் அளவும் அவற்றின் தீய விளைவுகளும்
இரத்த மதுச் செறிவு (சதவீதம்) தீய விளைவுகள்
0.02 சிறிய நிதானக் குழப்பம்
0.06 பகுத்தறிவு முடிவெடுத்தல் பாதிப்பு
0.08 சுய கட்டுப்பாட்டு இழப்பு
0.15 நிற்றல், நடத்தல், கதைத்தல் சங்கடம்
0.20 ஒழுங்கற்ற உணர்வு வெளிப்படுத்தல்கள்
0.30 துலங்கற் குறைபாடும் அரை உணர்வு நிலையும்
0.40 சுய நினைவிழத்தல்
0.50 மரணத்தை மணந்து கொள்ளல்
இங்கு 0.02 வீதம் என்பது 0.02 கிராம் (20 மில்லிகிராம்) ஆகும். இரத்தத்தில் தோன்றும் மதுவின் அளவு வெறும் 50 மில்லி கிராமாக உயர்கின்றபோது, சிறிய தள்ளாட்ட நிலையிலிருந்து, இறப்பை நோக்கி உந்துகிறது.
இரத்த மதுச் செறிவும் சாரதிய சட்ட வரையறைகளும்
உடற்கட்டமைப்பு, உடலிலுள்ள நீரின் அளவு மற்றும் உடலின் மதுசார நஞ்சகற்றும் தன்மை என்பன, ஆண்களை விட பெண்களில் குறைவு என்பதனால், ஒரே அளவான மதுவை அருந்தும் ஆண்கள்; மற்றும் பெண்களில் இரத்த மதுச் செறிவும் வெகுவாக வேறுபடுகிறது.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்களில், அவர்களின் உடல் நிறைகளுக்கேற்ப இரத்த மாதிரிச் செறிவுகளும் அவற்றுக்கான சட்டக் குற்றங்களும் ஒப்பிடப்பட்டுள்ளன.
அவற்றில் சட்டம் சார்ந்த போதை நிலை, குற்றவியல் குற்றங்கள் என்பன வௌ;வேறு இரத்த மதுச் செறிவினால் வரையறுக்கப்படுகின்றன. ஆனாலும் பாதுகாப்பான வாகன ஓட்டதலுக்கான செறிவு பூஜ்ஜியமாகவும் அல்லது மதுவருந்தி வாகனம் செலுத்துதல் சட்டப்படியான மதுக் குற்றங்களில் முன்னிலையாகவுமிருக்கிறது.
மதுவருந்துதலை நிறுத்துவதற்கான தந்திரோபாய தயார்படுத்தல்கள்;?
உள்ளகப் பொறிமுறை அணுகு முறை
பூரண மது விலக்கலுக்கான அர்ப்பணித்தல், சாராய மூளையின் தாகத்தை தவறென வெளிக்கொணர்தல், மதுவருந்த தூண்டும் சாராய மூளைக்கு 'ஒருபோதும் முடியாது' என பதிலளித்தல், மதுவிலிருந்தான மீட்சியை சந்தோசமாக அனுபவித்தல் போன்ற செயன் முறையின் ஊடாக, மதுப் பாவனையிலிருந்து முற்று முழுதாக விலகிக் கொள்ளமுடியும்.
மதுவிலிருந்து விலகி, நிரந்தர நிதானத்தை நிலை நிறுத்தல்
உங்களுடைய மனித மூளையின் நியாயமானதும், நிதானமானதுமான கட்டுப்பாட்டு கடப்பாடுகளால், சாராய மூளையை நசுக்குவதன் மூலம், குடிக்க வேண்டுமென்று, எதிர்காலத்தில் எழுகின்ற எண்ணங்களை எல்லாம், எளிதாக குழி தோண்டி புதைத்து, சாராய மூளையின் தவறான வழிப்படுத்தல்களை வெளிப்படுத்தி, மது வேட்கையை வெற்றி கொள்ளலாம்.
'என்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்தவொரு சந்தோசமான மற்றும் துக்கமான சந்தர்ப்பங்களிலும் மதுவை தொடமாட்டேன்' என்ற சத்தியவாக்கை நெஞ்சத்தில் பொறித்துக் கொள்ளவேண்டும்.
'மது என்றுமே எனக்கு கேடு' என்பதை தினமும் தொழுகை மந்திரமாக ஓதவேண்டும். இவற்றின் மூலம் சரியான அர்ப்பணிப்பை பேண முடியும்.
சாராய மூளையானது, ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி, கபடமான முறையிலே குடிக்க தூண்டுகின்ற வேளையிலும், 'இனி ஒரு போதும் இல்லை என்பதே முடிந்த முடிவு' என்பதில் இறுக்கமாக இருப்பதானால், மனித மூளையின் நல்ல செயற்பாடுகளை எப்போதுமே மேலோங்கியிருக்கச் செய்யலாம். விளையாட்டு, வீட்டு வேலைகளில் ஈடுபடுதல் மற்றும் பொழுது போக்கு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மதுவழித்தல் மூலம் பெற்றுக்கொண்ட இன்பத்தை இடைவிடாது இலகுவாக அனுபவிக்கலாம்.
புகைத்தல், மது தவிர்ப்பினால் உருவாகும் சேமிப்பு
உங்களுடையதும், உங்களை சார்ந்தவர்களினதும் எதிர்கால நலத்திட்டங்களுக்காகவும் மற்றும் சமூக நோக்கோடு செயற்படுகின்ற அறக்கட்டளைகளுக்காகவும் செலவிடுவதன் மூலம் வீட்டையும் நாட்டையும் நலனோம்ப செய்ய முடியும்.
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago