Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு, உடலின் எடை குறைய உதவுகிறது.
விட்டமின் டீ-5, விட்டமின் டீ-6 மற்றும் விட்டமின் டீ-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ளத் துணை செய்கிறது.
பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு இரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
விட்டமின்கள் நிறைய அளவில் இருப்பதால், அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இது விளங்குகிறது. முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
முட்டைகோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்களை' சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago