2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…!

Piriyadharshini   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல், இணையம் போன்று இன்னும் பல முறைகளில் இது தொடர்பான தகவல்கள் மற்றும் பாதிப்புகள், சிகிச்சைகள் என்று தெளிவு பெற்றுள்ளோம்.

ஆனால் இன்றுவரை அதிகமாக விழிப்புணர்வு இல்லாத விடயம் என்னவென்றால் புற்றுநோய் ஏற்பட்டதன் பின்னர் நோயாளர்களின் மனநிலை, மனநிலைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மிகவும் முக்கியமான ஒருவிடயமாகும். அதாவது புற்றுநோய் ஏற்பட்ட உடனே நோயாளர்கள் தனது மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது இனி என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது” என்ற எண்ணம் உடனடியாக நோயாளர்கள் மத்தியில் தோன்றிவிடுகின்றது. உண்மையில் இது மிகவும் தவறான எண்ணமே...

இதற்கு மாறாக புற்றுநோய் வந்துவிட்டால் இந்த நோய் எனக்கு ஏற்பட்டு விட்டதே.. என்று மனத் தைரியத்தை இழந்துவிடாமல். சரி நோய் வந்துவிட்டது அடுத்தப்படியாக இதற்கு நாம் என்ன சிகிச்சை பெறலாம் என்று அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்வதே மிகவும் சிறந்த செயலாகும் இதுவே இந்த நோயிலிருந்து நோயாளரை வெளிக்கொனர சிறந்த சிகிச்சையுமாகும்.

சில சமயங்களில் நீங்கள் சிகிச்சைக்காக புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது அங்குள்ள நோயாளர்களின் நிலைக்கண்டு “நாமும் இப்படித்தான் பாதிக்கப்படுவோம்” என்ற எண்ணம் மனதில் தோன்றுவது மனித இயல்பு தான் ஆனால் அதையும் மீறி நான் இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்கள்.

புற்றுநோய் மருத்துவமனைகளில் நீங்கள் காணும் நோயாளர்கள் பொதுவாக சிகிச்சையின் காரணமாக உடல் தளர்வடைந்து, உணவை வெறுத்தவர்களாக, சோர்வடைந்த முகமும், வழுக்கை தலையுடனும் இருப்பதென்பது உண்மையில் ஒரு கவலைக்குரிய நிலைதான் என்பதில் சந்தேகமில்லை.

இதனால், சிகிச்சைக்காக முதல் முறைச் செல்பவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். இதில் அதிகம் பாதிப்படுபவர்கள் பெண்கள் இதற்கு முதல் காரணம் தலைமுடியின்றி வழுக்கைத் தலையுடன் இருக்கும் நோயாளர்களைப் பார்த்துவிட்டு தனக்கும் இந்நிலை வந்துவிடும் தன்னால் தலைமுடி இல்லாமல் சமூகத்தில் வாழமுடியாது, மற்றவர்களிடம் இதற்கான காரணத்தை கூறிக்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள் இதனால் பெண்கள் அதிகளவில் மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “தலைமுடி இல்லாவிட்டால் என்ன? நம்மீது அன்புவைத்துள்ள நம் உறவினர்களுக்காக நம் உயிர் இருக்கின்றதே என்று யோசியுங்கள் அப்போது மீண்டும் மனத் தைரியம் நீங்கள் அறியாமலே உங்களுல் ஏற்படும்.

இத்துடன், முடிந்துவிடவில்லை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றபோது நம்முடன் சிகிச்சைக்கு வந்திருக்கும் சக நோயாளர்கள் இருக்கின்றார்களே அவர்களே நம் தைரியத்தை இழப்பதற்கு முதல் காரணமாக இருப்பார்கள் ஆனால், அதற்கு நீங்கள் இடம் கொடாதவராக இருங்கள்.

சிலநேரம் எனக்கு இப்படி நடந்தது, சில சிகிச்சைகளின் பின்னர் என்னால் சாப்பிடவே முடியாமல் போனாது, கீமோதெரபியோப்பி சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை அளிக்கின்றது என்றெல்லாம் தனக்கு நடந்தது, சக நோயாளர்களுக்கு நடந்தது என்று எல்லாவற்றையும் தொகுத்துக் கூறி உங்களை கலக்கமடைய வைத்து விடுவார்கள்.

இவ்வாறு கூறுபவர்கள் மத்தியில் நீங்கள் உங்கள் தைரியத்தை இழந்துவிடாமல், இல்லை எனக்கு தகுந்த சிகிச்சை அளிக்கின்றார்கள் கண்டிப்பாக நான் இதில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்துடன் இருங்கள் மற்றவர்களுக்கும் இத்தகைய ஆறுதல் வசனங்களை கூறுங்கள்.... இதுபோதும் நீங்கள் நோயிலிருந்து குணமடைந்துவிடலாம்.  

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம், நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம்.

பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X