2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:27 - 1     - {{hitsCtrl.values.hits}}

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பேருக்குத் தொல்லை கொடுப்பது பித்தப்பைக் கல்தான்.  

அறிகுறிகள்: இப்பாதிப்புக்கு ஆளானோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின் சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி (தொப்புளுக்கு மேல்) தோன்றுவது ஒரு வகை. இந்த வலி கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலதுப்புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் சென்று, தோள்பட்டை வரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.

முக்கியமாக கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய் பண்டங்களைச் சாப்பிட்டதும் இவ்வலி ஏற்படும்.
காரணம் என்ன?: கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புகள், தாதுகளைக் கரைசல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. பித்தக் கற்களை கொலஸ்ட்ரோல், நிறக்கற்கள் என்று வகைப்படுத்தலாம். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரோல் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றன. கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுகள் சேரும்போது நிறக்கற்கள் உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகும்.

தீர்வு: பித்தப்பையில் உள்ள கற்களை அறுவைச் சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் அகற்றலாம். 6 மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளியேறி விடும்.


You May Also Like

  Comments - 1

  • Manikand Monday, 03 July 2023 11:53 PM

    Thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X