2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நாயுருவின் நற்பலன்கள் இதோ!

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம்.  அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது. 

நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல்,  பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர, தேமல் என்பன  குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். இதன் இலையை 10 கிராம் எடுத்து  அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து, 2 வேளையாக 10 நாள்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X