2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தீவிர வைரஸை உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர். சிலர் தடிமலைத் தவிர வேறு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லையென கேள்விப்படுகையில், மேலும் சிலர் வைத்தியசாலையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு அவர்களது நுரையீரல் வீக்கமடைந்து ஒருவகை திரவம் நிரம்புவதனால் மரணிக்கின்றனர். ஒரு வைரஸ் அவ்வாறான மாற்றங்களை எப்படி ஏற்படுத்தும்?

புதிய கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக முழு உலகமும் மிகுந்த கஷ்டம் மற்றும் குழப்பமடைந்துள்ளது. எனினும் நீங்கள் வைரஸினால் குனமடைகிறீர்களா இல்லாவிட்டால் அதனால் நீங்கள் இறக்கப் போகிறீர்களா என்பது தொடர்பில் நோய் எதிர்ப்பு கட்டமைப்பானது மிகவும் தீர்மானம் மிக்க நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது தெளிவாக உள்ளது. உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் உங்கள் உடலில் உண்மையிலேயே என்ன நடக்கும், நீங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு உங்கள் உடலுக்கு உங்களால் எவ்வாறு உதவ முடியும் அத்துடன் இதனால் அதிகமாக பாதிப்படையும் அவதானும் யாருக்கு உள்ளது?

நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் செயற்பாடுகள்

நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், உங்களை நோய்க்குள்ளாக்கும் பக்றீரியா, பங்கஸ் மற்றும் வைரஸ் போன்ற நோயை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகள் பின்தொடர்வதுடன் தொடர்ச்சியாக தாக்குதல்களையும் மேற்கொள்கின்றன. மனித உடலானது மிகவும் சத்தான பதார்த்தங்கள் பலவற்றைக் கொண்ட சூடான, மிகவும் சிறந்த சூழலைக் கொண்டுள்ளதனால் இந்த வகையான நுண்ணுயிர்களுக்கு அதிகமாக மற்றும் பலமடைவதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது. உங்களது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு மிகவும் அவசியமடைவது இந்த சந்தர்ப்பத்தில் ஆகும். அது இவ்விதமாக ஆட்கொள்வோருக்கு எதிராக இருப்பது உங்கள் உடலிலுள்ள பாதுகாப்பு கட்டமைப் பொருத்தே ஆகும்.

புற்றுநோய், தைமஸ் சுரப்பி, எலும்பு மஜ்ஜை, மூடப்பட்ட நிணநீர்களைக் கொண்ட எமது உடலில் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு உடலுக்குள் நுழையும் எந்தவொரு பக்றீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளை அடையாளம் கண்டு, அதனை இலக்கு வைத்து அதனை அழிக்கும். எலும்பு மஜ்ஜைகள் மூலம் Lymphocytes மற்றும் Leucocytes (வெண் குறுதி) உருவாக்குவதுடன் புற்றுநோய், தைமஸ் சுரப்பி, மற்றும் மூடப்பட்ட நிணநீரில் தேக்கி வைத்து விநியோகிக்க இடமளித்து தேவையான வேளையில் இந்த வெண் குறுதியை விடுவிக்கும்.

வயதுடன் ஏற்படும் மாற்றங்கள்

வயதுடன் எமது நோய் எதிர்ப்பு சக்தியின் பிரதிபலிப்புக்கள் மாற்றடையக் கூடும். லிமிஃபோசைட்ஸ் உற்பத்தி குறைவடைவது மட்டுமன்றி அதன் செயற்பாடுகளும் குறைவடையும். வயதானவர்கள் இளைஞர்களின் அளவுக்கு பலத்துடன் இல்லாதிருப்பதற்கு இதுவே காரணமாகும். விசேடமாக அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் புதிதாக அல்லது முன்னர் எதிர்நோக்காத நோய்களே ஆகும். நாம் வயோதிமடையும்போது, எமது உடல் காலத்தோடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதோடு இவற்றில் சில பலவீனமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல் அல்லது அதிகமாக மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு பலவீனமடையும். நாம் வயோதிபமடைகையில் ஏராளமாக காணப்படும் நீரிழிவு, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், Myelodysplasia, தன்னியக்க நோய் எதிர்ப்பு கோளாறுகள் போன்ற நோய்கள் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை பயன்படுத்த உதவியாக இருக்கும். வயதானவர்களுக்கு COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது இதனாலேயே ஆகும்.

வைரஸ்கள் எதிர் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு

வைரஸ் மரபணு ரீதியாக எளிமையானது என்பதுடன் அவை அனைத்து இடங்களிலும் காணப்படும். அவை எமது உடலுக்குள் (இருமல் மற்றும் தும்மல், வணக்கம் வைத்தல்) காற்று, நுளம்பு போன்ற சிறிய பூச்சிகள் அல்லது எச்சில், இரத்தம் அல்லது விந்து போன்ற திரவங்களாலும் பரவுகின்றன. பொதுவாக சளி, இன்புளுவென்ஸா, சின்னமுத்து, டெங்கு மற்றும் எய்ட்ஸ் போன்றவை பெரும்பாலும் வைரஸ் காரணமாக ஏற்படக்கூடியவை. தனியாகவே அவைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாதபோதிலும் அவை மனித உடலுக்குள் புகுந்தவுடன், அவை உடலின் பல்வேறு கலங்களுக்குள் தொடர்புபடுவதுடன், வைரஸை அதிகளவில் பரப்புவதற்கு இந்த களங்களை தொழிற்சாலையாக பயன்படுத்துகிறது.

எமது உடல் வைரஸ் ஆதிக்கத்திற்கு பிரதிபலிப்பது உடல் எதிர்ப்புகளை உருவாக்குதன் மூலமாகும். இந்த உலகத்திலுள்ள மக்கள் தொகையை விட அதிகமாக எமது உடலில், உடல் எதிர்ப்புக்கள் உள்ளன. அதனால் எமது உடலுக்குள் வைரஸ் ஒன்று புகுந்தவுடனேயே எமது உடல் எதிர்ப்பு அதனை அடையாளம் கண்டுவிடும்.

வைரஸை அழிப்பதற்கு உடல் எதிர்ப்பு உதவி செய்யும் நடவடிக்கையின் போது, (இது நோய்எதிர்ப்பு பிரதிபலிப்பாகும்) பெரும்பாலான நோய் எதிர்ப்பு களங்கள் இயங்குவதுடன், எதிர்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் பல்வேறு புரதங்களை பெருமளவில் உற்பத்தி செய்யும். எமது உடலில் ஏற்படும் இந்த நோய் எதிர்ப்பு பிரதிபலிப்பு இடையூறானது, நாம் காணும் காய்ச்சல், மற்றும் நடுக்கம், முகம் சிவந்திருத்தல் போன்ற நோய் அறிகுறிகள் சிலவாகும்.

சில சந்தர்ப்பங்களில் கட்டமைப்பிற்கு முழுமையாக புதிய வகை விலங்குகளினால் பிரவேசித்த COVID-19 போன்ற வைரஸ் காரணமாக எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு அடிபணிந்துவிடுகிறது. அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் வைரஸை உடனடியாக அடையாளம் காணும் உடல் எதிர்ப்பு இல்லாமையினால் ஆகும். அதனால் வைரஸ் உடனடியாக வளர்ச்சியடைந்து பரவி எமது கட்டமைப்பிற்குள் பாரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். எனினும் பொதுவாக நோய்எதிர்ப்பு கட்டமைப்பு இதுவரை Cytokine Stormஐ உருவாக்குவதுடன் அங்கு அந்த வைரஸ் அழிக்கப்படாததனால் அழற்சி பிரதிபலிப்பு (Inflammatory response) தொடர்ச்சியாக இடம்பெறுவதனால் அது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது. இந்த இரக்கமற்ற அழற்சி பிரதிபலிப்பு மூலம் நுரையீரல், இதயம் மற்றும் சிறுனீரகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயலிழப்போடு உடலுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தும்.

நோய்க்கு எதிராக போராடுவதற்கு எமது வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்

பொதுவாகவே ஆரோக்கியமாக இருக்கும் வாழ்க்கையைத் தழுவிய முறையைத் தவிர்ந்த திடீரென எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பை அதிகரிக்க அல்லது மேம்படுத்த உண்மையிலேயே முடியாத விடயம். இதற்கு பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை அதிகமாக உட்கொள்ளுதல், போதுமான அளவு தயாரிக்கப்பட்ட நொருக்கு தீன் பண்டங்களிலுள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை அளவுடன் உட்கொள்ளுதல், தொடர்ச்சியான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் நிறையை பேணுதல், அளவோடு மதுபான பாவனை, அளவான ஓய்வு, குறைந்த மன அழுத்தம் மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்தல் போன்றவை உள்ளடங்கும்.

கெட்ட வாழ்க்கை முறையை தெரிவு செய்வது எமது உடலுக்கு பல்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அது மறைமுகமான பல்வேறு நோய்தொற்றுக்களுக்கு வழியை ஏற்படுத்தும். உதாரணமாக, புகைபிடித்தல் எமது சுவாசக் குழாயின் உட்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு இதனூடாக பக்றீரியா மற்றும் வைரஸ்களுக்கு நுரையீரலுக்குள் சென்று பல்வேறு பாதிப்புக்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும். அதிகமான மதுபானம் மற்றும் பலவீனமான உணவுப் பழக்கம் மூலமும் சின்க், செலினியம், செப்பு, இரும்பு, ஃபோலிக் அமிலம், விற்றமின் C,A,B மற்றும் E மற்றும் Thiamine போன்ற மைக்ரோ போஷாக்கு கொண்ட குறைப்பாடுகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு உதவக்கூடிய புரதத்தை தயாரிக்கும் முக்கிய ஆதாரமாகவுள்ள எமது கல்லீரலுக்கு மதுபானம் பாரிய விளைவை ஏற்படுத்தும். மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்க பழக்கம் மறு புறத்தில், பலவீனமான உணவுப் பழக்கம், மதுபானம் அருந்துதல், மற்றும் புகைப்பிடித்தலுக்கு சமமாக எமது உடலை பாதிப்பிற்குள்ளாக்கும் ஏனைய விடயங்களை அதிகரிக்கச் செய்யும்.

விசேடமாக COVID-19 உடனான போராட்டத்தில், உங்கள் கைகளை எப்பொழுதும் கழுவுதல், நன்றாக சமைத்த இறைச்சி, மரக்கறி மற்றும் பழங்களை நன்றாக கழுவுதல் மற்றும் சுகாதார ரீதியாக குப்பைகளை கொட்டுதல் போன்றவை நோய்த் தொற்றுக்களை தவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் - இவை இலகுவான விடயங்களாக இருந்தாலும் அநேக தூரம் செல்வதற்கு உதவியாக இருக்கும்.

ஊட்டச்சத்து கூடுவதனால் ஏற்படும் நன்மைகள்

சம்பிரதாய விட்டமின் C மூலம் சளி மற்றும் இன்புளுவென்ஸா போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். என்றபோதிலும், உடலின் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை பலப்படுத்துவது விற்றமின் C அடங்கிய உணவாகும். தொற்றுநோயைத் தடுப்பதற்காக துரிதமாக விற்றமின் C அளவை அதிகரித்தல், நேர்மறை அழுத்தத்தை ஏற்படுத்துமென விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சளி அல்லது இன்புளுவென்ஸா ஏற்பட்டவுடன் விற்றமின் C எடுத்துக் கொள்வது நோயின் கால எல்லையை குறைத்துக் கொள்ள முடிவதை காணலாம். சீனாவில் அண்மைய அறிக்கைகள் காட்டுகின்ற விதமாக மிக உயர்ந்த வில்லையாக விற்றமின் C, COVID-19 தொற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நிலைமையை மேம்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. இந்த விடயம் விரிவான பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அது எதுவாக இருந்தாலும் உங்களது முறையான உணவு வேளையின் இடைவெளியை நிரப்புவதற்காக பல தாதுக்கள் அடங்கிய பொதுவான மல்டி-விற்றமின்களை எடுத்துக் கொள்வது உகந்ததாகும்.

இறுதியாக,

COVID-19 என்பது எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்புக்கு பரீட்சயமில்லாத வைரஸ் ஆகும். அதனால் அதற்கு எதிராக போராடுவதற்கு எமக்கு உடல் எதிர்ப்பு இல்லை. அதனால் வைரஸ் எமது உடலுக்குள் பிரவேசித்தவுடன் நாம் சுகயீனமடைகிறோம். அதனால் இந்த வைரஸ் உடலுக்குள் நுழையும் நிகழ்வு அதிகமாகவுள்ளதனால் அதனை குறைத்துக் கொள்வதற்காக கைகளில் சரியான சுகாதாரத்தைப் பேணுதல், அனைத்து மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், நீங்கள் வெளியில் இருக்கும் போது உங்கள் கைகள் அசுத்தமாக இருந்தால் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களை தொடாமல் இருத்தல் போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் பொதுவான சுகாதார ரீதியான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் மற்றும் நாள்பட்ட நோயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை உறுதிப்படுத்தல், இந்த தீர்;மானம் மிக்க காலப்பகுதியில் மிகவும் முக்கியமானதாகும். இது மிகவும் கவலையை அளிக்கக் கூடிய உலகளாவிய கொள்ளை நோயாக இருப்பதுடன் இது இந்த நாட்டில் மட்டுமன்றி உலகத்திலுள்ள மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமன்றி பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் ஐய்யமில்லை. அதனால் கவலை என்ற பொதுவான உணர்ச்சிகள் மற்றும் எதிர்வினைகள் உங்களது உயிரை தொந்தரவு செய்யாமல் இருப்பது முக்கியமாகும். இறுதியாக இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் இதனை ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X