2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தலைவலிக்கு இது ஆகாது

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும்.

தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஒன்றுதான். இருந்தாலும் தலைவலி வந்துவிட்டால் அவ்வளவுதான், வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. பெரும்பாலும் தலைவலி ஏற்பட்டால் டீ அல்லது காபி ஸ்டிராங்காக குடிப்பது வழக்கம். ஆனால் அப்படி செய்வதால் மேலும் தலைவலிதான் ஏற்படுமாம்.

காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நாமே​ நினைத்துக் கொள்வோம். அது தான் பிரச்சினையே. ஆனால் உண்மை அது இல்லை. சில சமயங்களில் காபி உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிட்டு, அதிகரிக்க செய்யும். அதனால் தலைவலிக்கும் போது காபி குடிப்பதை தவிர்க்கவும்.

அதேபோன்று தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் நீங்காமல் இருக்கும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X