2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை!

சீரகம்=சீர்+அகம்..!

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –(anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic) வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு  சாப்பிட்டால், அதிக பேதிப் போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், நெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X