Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 14 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்புரியும் இடங்களில் உடல் உபாதைகள் ஏற்படுவது வழமையானதே. குறிப்பாக நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது வேலையை கணினி இலகுவாக்கினாலும் தொடர்ச்சியான வேலைகளால் நாம் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கண்பார்வை குறைபாடு, உடல் நோ, கூன் விழுதல், கழுத்து, முதுகு வலி என பல நோய்கள் எம்மை இலகுவில் தொற்றிக்கொள்கின்றன.
இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுபட வேண்டுமெனில் நாம் சில உடல் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவது முக்கியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது அன்றாட தொழில் நடவடிக்கைக்காக கணினியை பயன்படுத்தும் நாம், அலுவலகத்தில் வசதியாக, பாதுகாப்பாக, உற்சாகமாக இருக்கும் வழிகாட்டல் முறைகளை பின்தொடர்வோம்.
படி 1 - உங்கள் கதிரை
இயன்றளவு உங்கள் பிருட்டப் பகுதி கதிரையின் பின்புறத்தை தொடுமளவு அமருங்கள். பாதங்கள் தரையில் முழுதாக படுமளவு இருக்கையை சரிசெய்யுங்கள். உங்கள் முழங்கால் இடிப்புக்குச் சமமாக அல்லது அதைவிட குறைந்தளவில் இருக்குமளவுக்கு இருக்கையின் உயரத்தை சீர்செய்யவும்.
கதிரையின் பின்புறம் 100-110 பாகை சாய்வாக இருக்க வேண்டும். உங்கள் நாரி கதிரையில் தொட்டிருக்க வேண்டும். தேவையெனில் குஷன் அல்லது சிறிய தலையணையை பயன்படுத்தவும். உங்கள் கதிரையின் பின்புறத்தை சீர் செய்ய முடியுமாயின் அடிக்கடி அதன் நிலையை மாற்றவும்.
கைதாங்கியை உங்கள் தோலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வைத்திருக்கவும். கைதாங்கி உங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் அதனை அகற்றிவிடுங்கள்.
படி:2 விசைப்பலகை
உங்கள் விசைப்பலகை தட்டு, மவுஸை வைக்கவும் கால்களை அசைக்கவும் இடம்தர வேண்டும். அதன் உயரத்தை மாற்ற கூடியதாகவும் சரிக்ககூடியதாகவும் இருக்க வேண்டும்.
விசைத்தட்டுக்கு மிக நெருக்கமாக இருங்கள்.
உங்கள் உடலின் முன்னால் விசைப்பலகை இருக்க வேண்டும்.
உங்கள் தோற்பட்டைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விசைப்பலகையின் உயரத்தை சீர் செய்யவும்.
முழங்கை 100-110 பாகை அளவில் விரிந்திருக்க வேண்டும்.
மணிக்கட்டுக் கையும் நேராக இருக்க வேண்டும்.
நீங்கள் நிமிர்ந்த நிலையில் இருப்பவராயின், விசைத்தட்டை உங்களிலிருந்து விலகி சற்றுத் திருப்புங்கள். பின்பக்கம் சரிந்து இருப்பவராயின் விசைத்தட்டை உங்களை நோக்கி சற்று திருப்புங்கள்.
படி:3 திரை, ஆவணம், தொலைபேசி
திரை, மூல ஆவணம் (னுழஉரஅநவெ)என்பன சரியான இடத்தில் இல்லாதுவிடில் அந்தரமான நிலைமை ஏற்படும். உங்கள் கழுத்துக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் திரை, மூல ஆவணம் என்பவற்றை சீர்செய்து வையுங்கள்.
திரை உங்கள் முகத்துக்கு நேரே இருக்க வேண்டும்.
திரையின் உச்சமான இருக்கையின் போதான கண் மட்டத்துக்கு 2-3 அங்குலம் மேலே இருக்க வேண்டும்.
திரையிலிருந்து ஒரு கை நீளம் தள்ளி இருங்கள். உங்கள் பார்வை திறனுக்குத் தக்கதாக இது மாறலாம்.
திரையை சரியான இடத்தில் வைத்து கண் கூச்சத்தை குறையுங்கள்.
ஜன்னல்களுக்கு செங்குத்தாக திரை இருக்க வேண்டும்.
ஜன்னல் திரையை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.
மேலிருந்து வரும் வெளிச்சத்தால் உண்டாகும் கூச்சத்தை குறைக்க திரையின் கோணத்தை சீர் செய்க.
கூச்சத்தை குறைக்க filter fis (வடிகட்டிகளை) பயன்படுத்துக.
தொலைபேசியை இலகுவாக எடுக்கக் கூடியதாக வைக்கவும்.
படி:4 ஓய்வும் இடைவேளையும்
எவ்வளவு தான் நீங்கள் முயன்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யினும் நீண்ட நேரம் ஒரே மாதிரி இருத்தல் இரத்தோட்டத்தை குறைத்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு 1-2 நிமிட ஓய்வு எடுங்கள். ஒவ்வொரு மணித்தியாலத்துக்குப் பின்னரும் 5-10 நிமிட ஓய்வு எடுங்கள். அல்லது வேலையை மாற்றுங்கள்.
மதியபோசனத்தின் போது கணினியை விட்டு தூர போங்கள்.
அவ்வப்போது கண்களுக்கு ஆறுதல் கொடுங்கள். திரையை பார்க்காது தூர உள்ள பொருட்களை பாருங்கள்.
10-15 செக்கன்கள் கைகளால் பொத்தி கண்களை ஓய்வுவெடுக்க விடுங்கள்.
இயலுமான அளவுக்கு அசைந்து கொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago