Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .