2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

8 பேருக்கு அழைப்பாணை

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர  பிரதேசங்களில்  தொடர்ச்சியாக  தூர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில்   8 பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  தூர்நாற்றம் வீசுவதற்கான காரணங்களை இதுவரை கண்டறிந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  யூ.எல்.எம். நியாஸ் , கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.ஜே.கே.எம் அர்சத் காரியப்பர்,  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  முஹம்மத் அஸ்மி , கல்முனை மாநகர சபை விலங்கு வைத்தியர் வெட்டபொல ,   கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார்,அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்   மற்றும் குறித்த விடயம் தொடர்பில் சில செய்திகளை எழுதிய  பிராந்திய ஊடகவியலாளர் ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது  மேற்படி 8 பேரையும் எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன்,  எம்.எஸ்.ரஸாக் , சட்டத்தரணிகளான  ஜாவீட் ஜெமீல் ,அனோஜ் பிர்தௌஸ் ,அப்துல் கரீம் அகமட் றிப்கான்  ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .