2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

500 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணெய்

Freelancer   / 2022 மே 26 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டில் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

அந்த வகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று (26) மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. 

ஒரு நபருக்கு 500 ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள கொழுத்தும் வெயிலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் நீண்ட வரிசையில் அவதிப்பட்டு பெற்றுச் சென்றதை காணமுடிந்தது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .