2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

32 பொலிஸுக்கு தொற்று; பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 மே 26 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு இன்று (26)  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்,

பெரும் குற்றப்பிரிவு மற்றும்  சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பொலிஸார்,  சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதுடன்  கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .