2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

300 லீட்டர் கசிப்புடன் மூவர் கைது

Janu   / 2024 மே 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ,வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த மூவர் சனிக்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகந்தை இராணுவ புலானாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெலி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது .

இதன்போது , 300 லீட்டர் கசிப்பு , கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்திய ஒன்பது பரல்கள் மற்றும் செப்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X