2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

300 கிலோ கிராம் பழுதடைந்த வெங்காயம் மீட்பு

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடற்கரை வீதியில் பழுதடைந்த மனிதப் பாவனைக்கு உதவாத  பெரிய வெங்காயம் விற்பனை செய்த லொறியினை முற்றுகையிட்ட காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த லொறியிலிருந்து 300 கிலோ கிராம் பழுதடைந்த மனிதப் பாவனைக்கு உதவாத  பெரிய வெங்காயத்தை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து  (10)சனிக்கிழமை பழுதடைந்த மனிதப் பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயத்தை விற்பனை செய்த லொறியை  பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டனர்.

காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம் .எம் .பஷீர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம..ரஹ்மத்துல்லாஹ்  ஆகிய இருவரும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசிரீதீன் அவர்களின் ஆலோசனையுடன் இந்த முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது அழுகிய பழுதடைந்த  மனிதப் பாவனைக்கு உதவாத 300 கிலோ கிராம் பெரிய வெங்காயம் மீட்கப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களினால்  அவ்விடத்திலேயே அழிக்கப்பட்டதுடன்  குறித்த வெங்காய விற்பணை செய்த வியாபாரியையும் எச்சரித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X